இந்தியாவிலேயே முதல் ஹைபிரிட் கிரிக்கெட் மைதானம், ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இயற்கையான புல்வெளி கொண்டது சாதாரண மைதானமாகவும், இயற்கை, சிந்தடிக் பைபர் புல்வெளி கொண்டது ஹைபிரிட் மைதானமாகவும் கருதப்படுகிறது. அதன்படி, தரம்சாலாவில் முதல் ஹைபிரிட் மைதானம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த மைதானம் 5% சிந்தடிக் பைபர் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

5% செயற்கை இழைகள் மட்டுமே உள்ளதால், ஆடுகளமானது கிரிக்கெட்டுக்கு தேவையான இயற்கையான பண்புகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறது. ரூட் காற்றோட்ட அமைப்பான SISAir போன்ற தொழில்நுட்பங்களின் ஒருங்கிணைப்பு, இந்தியாவில் கிரிக்கெட் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.