உத்திரபிரதேசம் மாநிலத்தில் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் லக்னோவில் நடந்த கொடூர சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த மே மூன்றாம் தேதி 16 வயது சிறுமியை ஏழு பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்றுள்ளனர். அதன் பிறகு சிறுமியை மதுபானம் குடிக்க வைத்து ஏழு பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் நேற்று காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் குற்றவாளிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.