தயாரிப்பாளர் லலித் குமாருடன் பிரச்சனை ஏஜிஎஸ் – ரோகினி உட்பட திரையரங்குகள் படத்தை வெளியிட மறுப்பு தெரிவித்துள்ளனர். படத்தின் முதல் வார வசூலில் 80 சதவீதத்தை தயாரிப்பாளர் கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் வார வசூலில் 60 சதவீதம் மட்டுமே வழங்க முடியும் திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்து வருகின்றனர். லியோ முதல் வார வசூலை பிரிப்பதில் தயாரிப்பாளர் – தியேட்டர் ஓனர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகரில் முக்கிய திரையரங்குகளில் லியோவை வெளியிட மறுப்பு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.