லியோ படத்தின் சிறப்பு காட்சிகள் தொடர்பாக தமிழக அரசு சார்பில் ஏற்கனவே பிறப்பித்திருந்த உத்தரவில் 9 மணி முதல் இரவு அதிகாலை 1.30 மணி வரைக்கும் 5 காட்சிகளை எப்போது வேண்டுமானாலும் ஒளிபரப்பிக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் தான் லியோ பட குழுவினர் இதை தவிர்த்து மேலும் 9 மணி என்பதை 7 மணி சிறப்பு காட்சி மற்றும் முதல்நாள் அதிகாலை 4 மணி காட்சி வேண்டும் என்று தான் நீதிமன்றத்தை நாடினார்கள். ஆனால் நீதிமன்றமும் தற்போது 4  மணி காட்சிக்கு அனுமதி அளிக்க முடியாது என தெரிவித்துள்ளது.

அத்தோடு 9 மணி காட்சியை 7 மணி காட்சியாக மாற்ற நீங்கள்  வேண்டுமானால் தமிழக அரசிடம் கேட்டு என்ன நிலைப்பாடு என்பதை பெற்றுக் கொள்ளுங்கள் என்று படக்குழுவுக்கு அறிவுறுத்தி இருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் திரையரங்க உரிமையாளர்களுடைய நிலைப்பாடு என என நீதிமன்றம் கேட்டிருந்தது.இதற்க்கு திரையரங்க உரிமையாளர்கள் தங்களுடைய பதில் மனுவை தாக்கல் செய்திருக்கிறார்கள்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் திரையரங்க உரிமையாளர் சங்கம் சார்பில் தற்போது பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த பதில் மனுவில் ஏற்கனவே தமிழக அரசு வழங்கிருக்கக்கூடிய 5 காட்சிகளே போதுமானது.  காலை 9 மணி முதல் இரவு 1.30 மணிக்குள்ளாக ஐந்து காட்சிகளையும் திரையிடுவதற்கு நேரம் சரியாக இருக்கும் எனவும் அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாலை காட்சி சிறப்பு காட்சி 7 மணி காட்சிகள் எல்லாம் வந்தால் திரையரங்கினுடைய  உடமைகளுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் ஏற்படும்.   அதிகாலை முதலே ஏராளமான ரசிகர்கள் குவிய கூடிய நிலையில் பாதுகாப்பிற்காக சிறப்பாக 50க்கும் மேற்பட்ட காவலர்களை பணிக்கு அமர்த்த வேண்டும். இவ்வாறான சிக்கலுக்கு மத்தியில் அதிகாலை காட்சிகள் திரையிடுவது திரையரங்கிற்கும்,  திரையரங்க உரிமையாளருக்கும் பாதிப்பை தான் ஏற்படுத்தும். ஆகவே 4 மணி மற்றும் 7 காட்சிகள் தேவையில்லை என்று பதில் மனுவில் திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.