தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் அனைவரும் உற்சாகமாக கொண்டாடி வரும் நிலையில் கிருஷ்ணகிரியில் லியோ திரைப்படத்திற்கு டிக்கெட் கிடைக்காததால் திரையரங்கின் பின்புறம் உள்ள சுவரில் ஏறி குதித்த விஜய் ரசிகர் அன்பரசு என்பவருக்கு கால் முடிவு ஏற்பட்டது. இதனை அடுத்து அந்த இளைஞரை மீட்ட காவல்துறையினர் அவருக்கு அறிவுரை கூறி உடனே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.