நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் லியோ. இன்று வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் விஜய் இந்த திரைப்படத்திற்காக வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மடோனா சபாஷ்டியன், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.

மேலும் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில் விஜய் இந்த படத்திற்காக வாங்கிய சம்பள விவரம்வெளியாகி  உள்ளது. அதாவது  கிட்டத்தட்ட அந்த படமானது 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி உள்ளது. அதில் படம் வெளியாவதற்கு முன்பே 150 கோடிக்கு மேல் லாபத்தை பெற்றுள்ளது. அதில் இந்த படத்திற்காக விஜய் 120 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.