‘லியோ’ படத்தின் தெலுங்கு போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. Keep calm and avoid the battle’ என்ற வாசகங்களுடன் வெளியான போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நேற்றைய தினம் SIIMA விருது நிகழ்ச்சியில் பேசிய லோகேஷ் லியோ படத்தின் புரோமோஷன் வேலைகள் விரைவில் தொடங்கும் எனக் கூறியிருந்தார். இந்நிலையில் அந்தப் படத்தின் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. லியோ படத்தில் த்ரிஷா, அர்ஜுன், சஞ்ஜய் தத், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.