‘லியோ’ படத்தில் இருந்து லோகேஷ் கனகராஜ் விலகி விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், லியோ படகவர் போட்டோ மற்றும் லியோ பட இயக்குனர் என்று குறிப்பிட்டிருந்ததை நீக்கிவிட்டு, விக்ரம் பட கவர் போட்டோ மற்றும் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களின் இயக்குனர் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் விஜய், லோகேஷ் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.