ரஜினிகாந்தின் 171 வது படம் தொடர்பான அப்டேட் தற்போது வெளியாகி இருக்கிறது.

நடிகர் ரஜினிகாந்தின் 171 வது படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவன தயாரிக்கிறது. லோகேஷ் கனகராஜ் படத்தை இயக்குகிறார். இதற்கு முன் லோகேஷ் கனகராஜ் இயக்கிய எல்லா படங்களும் மிகப்பெரிய வெற்றி அடைந்திருக்கிறது. விஜயின் லியோ படம்  அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. அதற்கான எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருக்கிறது.

ஏற்கனவே கமலஹாசனை வைத்து அவர்களை இயக்கிய விக்ரம் படமும் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இந்த தொடர்ந்து ரஜினிகாந்தின் படத்தை இயக்க இருக்கிறார். முன்பு இந்த படமும் கமலஹாசன் தயாரிப்பில் உருவாவதாக இருந்தது. பின்பு பல்வேறு காரணங்கள் அது,  நடக்கவில்லை. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். இதற்கு முன்பு இவர்களின் எல்லா பாடல்களுமே மிகப்பெரிய வெற்றி அடைந்திருக்கிறது. அன்பறிவு இந்த படத்தின் சண்டை பயிற்சியாக இணைந்திருக்கிறார். இந்த படத்திற்கும்  மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.  ஏனென்றால் லோகேஷ் கனகராஜ் தனது LCU என்ற ஒரு விஷயத்தை உருவாக்கி இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இந்த படமும் LCUவில் வருமா?  என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருந்திருக்கிறது.