சமூக வலைத்தளங்களில் நாள்தோறும் பல வினோதமான வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில், சாலையோரம் ரொமான்ஸில் ஈடுபட்டிருந்த காதல் ஜோடி ஒன்று, எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. வைரலாகி வரும் அந்த வீடியோவில், இளம் ஜோடி ஒன்று சாலையோரம் நின்று கொண்டு ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கின்றனர். ஒருகட்டத்தில் உலகத்தையே மறந்து தங்களைச் சுற்றியுள்ள சூழலை கவனிக்காமல் அவர்கள் ஒருவரை ஒருவர் முத்தமிடுவதில் மூழ்கியுள்ளனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக பின்னோக்கி சாய்ந்ததில் இருவருமே நிலைதடுமாறி, பின்னால் இருந்த பள்ளத்தில் விழுந்தனர். அவர்கள் இருவரும் விழுந்த வேகத்திலேயே அந்த வீடியோ முடிவடைகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் விதவிதமான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். “காதலில் விழுவது கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் இப்படி விழுவதை இப்போதுதான் பார்க்கிறோம்” என ஒருவர் கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
மேலும் இந்த வீடியோவைப் பார்த்தால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை, மிகவும் வேடிக்கையாக இருக்கிறது” என மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார். இன்னும் சிலரோ, “யாரைப் பற்றியும் கவலைப்படாமல் தங்களது உலகத்தில் மூழ்கியிருந்த இவர்களது துணிச்சலை பாராட்டத்தான் வேண்டும்” எனக் கருத்து தெரிவித்துள்ளனர். இருப்பினும், பொது இடங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும்போது கவனமாக இருக்க வேண்டும் என்றும் சிலர் அறிவுறுத்தி வருகின்றனர்.
