மத்திய காஸாவின் அல்-மகசி அகதிகள் முகாம் அருகே, 18 மாதமே ஆன பாலஸ்தீனக் குழந்தை ஒன்றை இஸ்ரேல் ராணுவத்தினர் பிணைக் கைதியாகப் பிடித்து வைத்து, சிகரெட்டாலும் ஆணியாலும் சுட்டு சித்திரவதை செய்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. குழந்தையின் தந்தை முன்னிலையிலேயே இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது சர்வதேச அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மார்ச் 21 அன்று, ஒசாமா அபு நாசர் என்பவர் தனது ஒன்றரை வயது மகன் கரீம் அபு நாசருடன் சென்றுகொண்டிருந்தபோது, இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் (IDF) அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். பின்னர், தந்தையை நிர்வாணப்படுத்தி சோதனையிட்ட ராணுவத்தினர், அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்காகக் குழந்தையை சித்திரவதை செய்துள்ளனர்.

இதுகுறித்து குழந்தையின் தாய் கூறுகையில், “குழந்தையின் உடலில் சிகரெட்டால் சுட்ட காயங்கள் உள்ளன. மேலும், ஒரு ஆணியை அவனது காலில் ஏற்றி இஸ்ரேல் வீரர்கள் சித்திரவதை செய்துள்ளனர்” என வேதனையுடன் தெரிவித்தார். 10 மணி நேரத் தடுப்புக்காவலுக்குப் பிறகு, செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் குழந்தை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், குழந்தையின் தந்தை இன்னும் இஸ்ரேல் வசமே உள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by PalPulse (@pulseofpal)

இந்தச் சம்பவத்திற்கு ஐநா சபையின் பாலஸ்தீனப் பகுதிகளுக்கான சிறப்புத் தூதர் பிரான்செஸ்கா அல்பானீஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “ஒரு தந்தையை உடைப்பதற்காக, பச்சிளம் குழந்தையைச் சித்திரவதை செய்யும் அளவுக்குப் பாழாய்ப்போன குற்றவாளிகளாக இவர்கள் இருக்கிறார்களே!” என்று அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், இஸ்ரேல் சிறைகளில் பாலஸ்தீனர்கள் முறையாகவும் திட்டமிடப்பட்டும் உடல் மற்றும் மன ரீதியான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். எந்தவொரு குழந்தையும் இத்தகைய கொடுமைக்கு உள்ளாக்கப்படக் கூடாது. அமெரிக்க வரி செலுத்துவோர் பணம் இத்தகைய அத்துமீறல்களுக்குப் பயன்படுத்தப்படுவதை  உடனடியாகத் தடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளது.

உலகம் ஒன்று காஸாவுடன் நிற்க வேண்டும் அல்லது குழந்தைகளைச் சித்திரவதை செய்யும் காலனித்துவ பயங்கரவாத ஆட்சிக்கு ஆதரவாக நிற்க வேண்டும். இதில் நடுநிலைமை என்பது கிடையாது” என ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப் தெரிவித்துள்ளார். ஐநா அறிக்கையின்படி, அக்டோபர் 2023 முதல் இதுவரை சுமார் 18,500 பாலஸ்தீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 1,500-க்கும் மேற்பட்டோர் குழந்தைகள். சிறைகளில் முறையான உணவு வழங்காமல் பட்டினி போடுவது, பாலியல் வன்கொடுமை மற்றும் கொடூரமான தாக்குதல்கள் தினசரி நிகழ்வுகளாக மாறியுள்ளதாக அந்த அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து ஒரு நடுநிலையான விசாரணை ஆணையத்தை அமைக்குமாறு இஸ்ரேலை ஐநா கேட்டுக்கொண்டுள்ளது.