சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் கடைசி 5 படங்களுக்க்கான வசூல் விவரங்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

நேற்றைய தினம் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்கும் இயக்குனர் நெல்சன் அவர்களுக்கும் இந்தத் திரைப்படம் சிறந்த கம்பேக் படமாக அமைந்துள்ளாதாக கூறி அவரது ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயிலர் படத்திற்கான முதல் நாள் வசூல் என்னவாக இருக்கும் என்ற ஆர்வம் அனைவரிடமும் எழத் தொடங்க, ரஜினியின் முந்தைய படங்களை விட ஜெயிலர் முதல் நாள் வசூலில் அதிகமாக ஈட்டி சாதனை படைக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகவும் உள்ளது.

அதன்படி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் கடைசி ஐந்து படங்களின் முதல் நாள் வசூல் விவரம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம், சென்ற வருடம் வெளியான அண்ணாத்த திரைப்படத்தின் முதல் நாள் வசூல் ரூபாய் 75 கோடி, 2020இல் வெளியான தர்பார் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் ரூ 55 கோடி,  2019-ல் வெளியான பேட்டை திரைப்படத்தின் முதல் நாள் வசூல் ரூ 37 கோடி,  2018 வெளியான 2.0 திரைப்படத்தின் முதல் நாள் வசூல் ரூபாய் 110 கோடி, அதே 2018 ஜூலை மாதம் வெளியான காலா திரைப்படத்தின் முதல் நாள் வசூல் ரூபாய் 30 கோடி. சூப்பர் ஸ்டார் அவர்களின் முந்தைய படங்களை விட அதிக முதல் வசூலை அதிகமாக ஈட்டி ஜெய்லர் ரெக்கார்ட் மேக்கராக இருக்குமா ? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.