தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா சமீபத்தில் ஒரு அரசு பள்ளியில் ஆய்வுக்கு சென்றபோது ஒரு மாணவியிடம் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு அந்த மாணவிக்கு பதில் தெரியாததால் முதல் பெஞ்சில் இருக்கும் மனைவியே இப்படி இருக்கும்போது கடைசி பெஞ்சில் இருக்கும் மாணவிகளின் நிலையில் நினைத்து பாருங்கள் என்று கூறியதோடு ஆங்கில வகுப்பு பாடங்களை மேம்படுத்துமாறு வலியுறுத்தினார்.
இது பெரும் சர்ச்சையாக மாறிய நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலரும் அமைச்சர் கீர்த்தனாவுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனிடம் இது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் , அரசு பள்ளியில் அமைச்சர் கீர்த்தனா ஆய்வுக்கு போனது மரபு தான். அதில் எந்த தவறும் கிடையாது.
மாணவியிடம் ஒரு எளிய முறையில் பழகும் நோக்கத்தில் தான் அவ்வாறு பேசினார். அமைச்சர் கீர்த்தனா மாணவிகளிடம் அக்கா ஸ்தானத்தில் தான் அப்படி பேசினார் இதனை யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். மாற்றுத்திறனாளி ஒருவருக்கு மகளாக பிறந்து தமிழ் வழியில் பயின்று தன்னுடைய ஆங்கில திறமையை வளர்த்து இன்று இப்படிப்பட்ட ஒரு நிலைக்கு கீர்த்தனா வளர்ந்து இருப்பதாகவும் கூறினார். மேலும் முன்னதாக அமைச்சர் நிர்மல் குமார் முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்தே தேவையில்லாமல் ஆய்வுக்கு செல்லக்கூடாது என கூறப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் கீர்த்தனா எந்த நோக்கத்தினால் என்பது தெரியவில்லை என பதில் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
