செங்கல்பட்டு மாவட்டம் உள்ள மேல்மருவத்தூர் கோவிலில் இருந்து 20 பக்தர்கள் கும்மிடிப்பூண்டி நோக்கி வேனில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் வண்டலூர் வெளிவட்ட சாலை அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 12 பெண்கள் உட்பட 13 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்த 13 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.