பயங்கர விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் காங்கேயம் அருகே நடந்த சாலை விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதாவது திருப்பூரில் உள்ள வரட்டு பாளையம் என்ற இடத்தில் லாரியும் மினி லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மினி லாரியில் பயணித்த 40 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.