ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய முகமாகவும், மாநிலங்களவை துணைத் தலைவராகவும் இருந்த ராகவ் சத்தா, தற்போது அந்தப் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ராகவ் சத்தாவிற்குப் பதிலாக அசோக் மிட்டல் புதிய துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் ஹரியானா பிரிவு முன்னாள் தலைவர் நவீன் ஜெய்பிந்த் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இந்திய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
முதல்வர் கெஜரிவாலின் அதிகாரப்பூர்வ இல்லமான ‘சீஷ்மகால்’-லுக்கு ராகவ் சத்தாவை வரவழைத்து, அவரை ‘முருங்கா’ (முட்டி போட வைத்து) நிலையில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கியதாக நவீன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்தத் தாக்குதலில் ராகவ் சத்தாவின் கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், அதற்காகவே அவர் லண்டன் சென்று சிகிச்சை பெற்றுத் திரும்பியதாகவும் நவீன் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
राजदार राघव जी वो क्यो नहीं बताते जब आपको
शीशमहल में बुलाके
मुर्गा 🐓 बनाके पीटा गया थातो आप की आँख में चोट लगी जो इंग्लैंड में जाके ठीक हुई जब आशुओं का सैलाब आया था
आपसे हिम्मत वाली तो महिला सांसद निकली जिसने लोगो को कुछ पिटाई का तो बताया
हिम्मत दिखाओ राघव लोगो को बताओ pic.twitter.com/pJXD4taMFk
— नवीन जयहिन्द🇮🇳 (@NaveenJaihind) April 3, 2026
“பெண் எம்.பி (ஸ்வாதி மாலிவால்) தனக்கு நேர்ந்த தாக்குதலை தைரியமாகச் சொன்னார், ஆனால் ராகவ் சத்தா ஏன் உண்மையைச் சொல்லப் பயப்படுகிறார்?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கட்சித் தலைமை தன்னை ஒடுக்கப் பார்ப்பதாக ராகவ் சத்தா குற்றம் சாட்டியுள்ள நிலையில், அவர் பாஜகவிற்குப் பயந்து செயல்படுவதால் தான் பதவி பறிக்கப்பட்டதாக ஆம் ஆத்மி தரப்பு பதிலடி கொடுத்துள்ளது. ராகவ் சத்தாவைச் சுற்றி வலம் வரும் இந்த ‘சித்திரவதை’ புகார்கள், தற்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளன.
