சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் குடும்பங்களில் ஒன்று ரோபோ சங்கரின் குடும்பம். இவருடைய மகள், மனைவி என அனைவருமே ரீல்ஸ் செய்து வெளியிடுவது வழக்கம். ரோபோ சங்கர் பிரபல விஜய் தொலைக்காட்சியில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்றவர். இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களோடு இணைந்து பல படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் சமீப காலமாகவே இவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருகிறார்.

 

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் குடும்பத்தோடு இவர்கள் குலதெய்வம் கோயிலுக்கு சென்றிருக்கும் புகைப்படங்களானது இணையத்தில் வெளியானது. அப்போது ரோபோ சங்கர் மகள் இந்திரஜா மாமாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இருந்துள்ளது. இந்த நிலையில் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்கள் இருவரும் திருமணம் செய்ய போகிறீர்களா? என்று கேள்வி எழுப்ப அதற்கு இந்திரஜா ஆமாம் ஆனால் தேதி என்று முடிவு செய்யவில்லை என்று பதில் அளித்துள்ளார்.