ஐபிஎல் 2026 சீசன் தொடங்குவதற்கு முன்பே மைதானத்திற்கு வெளியிலும் ஆட்டம் களைகட்டத் தொடங்கிவிட்டது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் நட்சத்திரமான வைபவ் சூரியவன்ஷி, தனது பிறந்தநாளை முன்னிட்டு ஒட்டுமொத்த அணிக்கும் ஒரு பிரம்மாண்ட விருந்து கொடுத்துள்ளார்.

இந்த பார்ட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்கள் அனைவரும் கலந்துகொண்டு செம ஜாலியாக நேரத்தைச் செலவிட்டனர். பார்ட்டி முடிந்து வெளியே வந்த வைபவ்விடம், “செலவு எப்படி?” என்று ஜாலியாகக் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் சிரித்துக்கொண்டே, “ரொம்ப விலை அதிகம் தான் (Bahut mehenga hai).. ஆனா என்ன பண்றது, மேனேஜ் பண்ணிதான் ஆகணும்” என்று கலகலப்பாகப் பதிலளித்தது இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இளம் வீரராக இருந்தாலும், அணியினருடன் ஒரு நல்ல பிணைப்பை ஏற்படுத்த அவர் எடுத்த இந்த முயற்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மைதானத்தில் அதிரடி காட்டுவதற்கு முன்னரே, ஆஃப்-ஃபீல்டிலும் வைபவ் செம ஸ்கோர் செய்துவிட்டார் என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.