ஐபிஎல் 2026 போட்டிகள் விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மைதானத்திற்கு வெளியிலும் முன்னாள் வீரர்களுக்கு இடையே மோதல் இருப்பது போன்ற பிம்பத்தை உருவாக்க சமூக வலைதளங்களில் சில ரசிகர்கள் முயன்று வருகின்றனர். அந்த வகையில், அஸ்வின் மீது ஹர்பஜன் சிங்கிற்குப் பொறாமை இருப்பதாகக் கூறி வம்புக்கு இழுத்த ரசிகர் ஒருவரை, ஹர்பஜன் சிங் மிகக் கடுமையான வார்த்தைகளால் திட்டித் தீர்த்துள்ளார்.
ஐபிஎல் வர்ணனையின் போது ஹர்பஜனின் கமெண்டரி குறித்து விமர்சித்த அந்த நபர், “அஸ்வின் உங்களை விடச் சிறந்த வீரர் என்பதால் நீங்கள் அவர் மீது பொறாமைப்படுகிறீர்கள்” என மீண்டும் மீண்டும் பதிவிட்டார்.
Ian Bishop is more Indian than these chapri Hindi commentators 🤡 pic.twitter.com/lXuqQeaWFr
— Homie (@homelander_yyy) March 29, 2026
ஆரம்பத்தில் அமைதியாக இருந்த ஹர்பஜன், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து, “நாய்க்கு நெய் செமிக்காது, உன்னைப் போன்ற ஆட்களுக்கு நான் சொல்லும் பதில் செமிக்காது.. கிளம்பு டாம்மி” என ஆபாசமான மற்றும் கடுமையான இந்தி வார்த்தைகளைப் பயன்படுத்தி அந்த ரசிகருக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.
कुत्ते को घी नहीं पचता और तेरे जैसे लोंडू को जवाब हज़म नहीं हुआ । चल बे टोमी https://t.co/0f1FBbj9Fw
— Harbhajan Turbanator (@harbhajan_singh) March 29, 2026
ஹர்பஜன் சிங்கின் இந்த ‘ரூத்லெஸ்’ பதில் இப்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. ஹர்பஜன் மற்றும் அஸ்வின் இடையே மோதல் இருப்பதாகச் சொல்லப்படுவதை இருவரும் ஏற்கனவே பலமுறை மறுத்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் மீண்டும் ஒரு சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
