தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 37 லட்சம் குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணம் 6000 ரூபாய் வழங்க தமிழக அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதே சமயம் ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரணத் தொகை வழங்கப்படும் எனவும் அதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் 5.5 லட்சம் மக்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இவ்வாறு ரேஷன் கார்டு இல்லாமல் நிவாரணத் தொகை பெறுவதற்கு விரும்பும் பொதுமக்களுக்கு ரொக்க பணமாக இல்லாமல் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும் என்று தமிழக அரசு சார்பாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை வங்கி கணக்கு மூலமாக 6000 ரூபாய் நிவாரணத் தொகை பொது மக்களை சென்றடையாத நிலையில் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த நிலையில் விண்ணப்ப படிவங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு வரும் நிலையில் அடுத்த ஒரு வாரத்திற்குள் வங்கி கணக்கில் நிவாரண தொகை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
