தமிழக அரசு பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு வழங்கி வருகிறது. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் இதன் மூலமாக மிகுந்த பயனடைகின்றனர். அதே சமயம் சிலர் இந்த பொருட்களை முறைகேடாக கடத்தி கள்ளச் சந்தையில் விற்று அதிக லாபம் பெறுகின்றனர்.

அதனால் பொதுமக்கள் தங்களது பகுதியில் நடைபெறும் பொது விநியோகப் பொருள் கடத்தல், பதுக்கல்  தொடர்பான புகார்களை உடனுக்குடன் பொது விநியோகப் பொருள் தடுப்பு பிரிவுக்கு 18005995950 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.