தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்டங்களிலும் ரேஷன் அட்டைகள் குறைதீர் முகாம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று சென்னையில் ரேஷன் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. அதன்படி சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் கீழ் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் இந்த முகாம் நடைபெற இருக்கும் நிலையில் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்குதல், செல்போன் நம்பர் மாற்றம், முகவரி மாற்றம், அங்கீகார சான்று பெறுதல் உள்ளிட்ட பொது விநியோகம் தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

அதோடு ரேஷன் கடைகளில் ஏதேனும் பிரச்சினை இருந்தாலும் முறையாக புகார் தெரிவிக்கலாம். இன்று சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை முகாம் நடைபெற உள்ளது. மேலும் இதன் காரணமாக பொதுமக்கள் இந்த முகாமினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.