சென்னையில் கடந்த இரண்டு நாட்களில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 600 ரூபாய் வரையில் உயர்ந்த நிலையில் இன்று விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 520 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 73120 ரூபாய்க்கும் ஒரு கிராம் 9140 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் உயர்ந்து ஒரு கிராம் 9 ஆயிரத்து 971 ரூபாய்க்கும், ஒரு சவரன் 79768 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை இன்று ஒரே நாளில் 4 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு கிராம் 125 ரூபாய்க்கும் ஒரு சவரன் 125000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
