தமிழகத்தில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையும் என்று உள்துறை மந்திரி அமித்ஷா தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் அதனை மறுத்து வரும் நிலையில் அதிமுக மட்டும் தான் தனித்து ஆட்சி அமைக்கும் எனவும் எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் என்றும் கூறுகிறார்கள்.

ஆனால் அமித்ஷா தொடர்ந்து கூட்டணி ஆட்சி என்று கூறிவரும் நிலையில் தற்போது பிரபல நாளிதழ் ஒன்று அளித்த பேட்டியில் மீண்டும் ஒருமுறை தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையும் கண்டிப்பாக அதிமுகவிடம் ஆட்சியில் பங்கு கேட்போம் எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதன் பிறகு விஜய் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவாரா என்ற கேள்விக்கு அனைத்து கட்சிகளையும் நாங்கள் கூட்டணிக்கு கொண்டுவர முயற்சி செய்கிறோம் என்று கூறினார்.

மேலும் எடப்பாடி பழனிசாமி கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா சொல்லவில்லை என்று கூறும் நிலையில் தற்போது அமித்ஷா கண்டிப்பாக அமைச்சரவையில் பங்கு கேட்போம் எனக் கூறியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.