தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கியுள்ள நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். நடிகர் விஜய் கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என்று அறிவித்துள்ள நிலையில் அரசியல் எதிரி திமுக மற்றும் கொள்கை எதிரி பாஜகவுடன் மட்டும் ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டோம் என கூறியுள்ளார்.
அதே நேரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைமையில் தான் 2026 ஆம் ஆண்டு தேர்தலை சந்திப்போம் எனவும் நடிகர் விஜய் தான் முதலமைச்சர் வேட்பாளர் எனவும் சமீபத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டத்தின் போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் தலைமையில் தமிழக வெற்றி கழகம் தனியாக தேர்தலை சந்திக்க இருக்கும் நிலையில் தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் நடிகர் விஜய் இணைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அமித்ஷா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஆங்கில ஊடகம் ஒன்று அளித்த பேட்டியில் கூட்டணி தொடர்பாக விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் பல கட்சிகளை தேசிய ஜனநாயக கூட்டணியில் கொண்டுவர முயற்சி செய்வதாகவும் கூறியுள்ளார். அதோடு தமிழ்நாட்டில் நிச்சயம் கூட்டணி ஆட்சி தான் அமையும் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் நடிகர் விஜய் பாஜக மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என கூறிவரும் நிலையில் அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் விஜய் எங்கள் கூட்டணியில் இருந்தால் நல்லது என்று கூறி வருகிறார்கள். மேலும் இந்த நிலையில் உள்துறை மந்திரி அமித்ஷா கூட்டணி தொடர்பாக விஜய்யுடன் பேச்சு வார்த்தை நடத்துவதாக கூறிய தகவல் அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது.
