தமிழகத்தில் ரேஷன் கார்டுகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி பருப்பு போன்ற அத்தியாவசியமான பொருள்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணிகளும் நடைபெற்று வரும் நிலையில் அமைச்சர் சக்கரபாணி தகுதியுள்ளவர்கள் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தால் 15 நாட்களில் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதன் பிறகு இந்த மாதம் முதல் ரேஷன் கடைகளில் கூடுதல் கோதுமை கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதாவது மத்திய அரசிடம் தமிழ்நாட்டிற்கு 25 ஆயிரம் டன் கோதுமை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்திய நிலையில் தற்போது 17,100 மெட்ரிக் டன் கோதுமையை ஒதுக்கியுள்ளது. இதன் காரணமாக இந்த மாதம் முதல் ரேஷன் கடைகளில் கூடுதலாக வாடிக்கையாளர்களுக்கு கோதுமை வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் 15 நாட்களில் புதிய ரேஷன் கார்டுகள் கிடைக்கும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.