துருக்கி நாட்டில் கடந்த 6 ஆம் தேதி பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிட்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கத்தினால் இதுவரை 5000க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். மேலும் இடிபாடுகளுக்குள் இன்னும் பல சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில் அந்நாட்டில் ஹடாய் மாகாணத்தில் அமைந்துள்ள விமான நிலையத்தின் ஓடுபாதை நிலநடுக்கத்தினால் இரண்டாக பிளவுப்பட்டுள்ளது. இந்த பிளவினால் விமான நிலையத்தில் உள்ள விமானங்களை இயக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.