சென்னை திருவொற்றியூரில் மாம்பழம் விற்கும் பாட்டிக்கு 500 ரூபாய் குழந்தைகள் விளையாடும் டம்மி நோட்டை கொடுத்துவிட்டு ஒரு பெண் மாம்பழம் வாங்கி சென்றார். இதன் காரணமாக அந்த மூதாட்டி தன்னுடைய இயலாமையை வெளிப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டு அழுத வீடியோ நேற்று சோசியல் மீடியாவில் மிகவும் வைரலானது.
View this post on Instagram
இந்த வீடியோவை பலரும் நடிகர் பாலாவுக்கு அனுப்பி வைத்த நிலையில் அவர் இன்று அந்த மூக்காட்டியை தேடி சென்று உதவி செய்தார். அவர் அந்த மூதாட்டியின் அனைத்து மாம்பழங்களையும் வாங்கிவிட்டு அதற்கு உரிய பணத்தை கொடுத்துவிட்டு சென்றார். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பாலாவுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வரும் நிலையில் மூதாட்டியை ஏமாற்றிய பெண்ணை சரமாரியாக விளாசி வருகின்றனர்.
