கடந்த மூன்று நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை 720 ரூபாய் குறைந்து சவரனுக்கு 46 ஆயிரத்திற்கும் கீழ் சென்றுள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 45 ஆயிரத்து 920 ரூபாய்க்கும், கிராமுக்கு பத்து ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 740 ரூபாய்க்கும் விற்பனையாகின்றது. அதேசமயம் வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசு அதிகரித்து 76 ரூபாய்க்கும், கிலோ வெள்ளி 76 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகின்றது