கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வந்த ஆபரண தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்ததால் நகை பிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 46 ஆயிரத்து 400 ரூபாய்க்கும், கிராமுக்கு பத்து ரூபாய் குறைந்து 5800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதனைப் போலவே ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசுகள் குறைந்து 76.50 க்கும், கிலோ வெள்ளி 76 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.