ஆபரண தங்கத்தின் விலை கடந்த 4 நாட்களில் 480 ரூபாய் குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 46 ஆயிரத்து 640 ரூபாய்க்கும், கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 5830 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அதனைப் போலவே ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசுகள் குறைந்து 76 ரூபாய்க்கும், கிலோ வெள்ளி 700 ரூபாய் குறைந்து 76 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.