ஆபரண தங்கத்தின் விலை 47 ஆயிரம் ரூபாய் நெருங்கியதால் வாடிக்கையாளர்கள் சற்று கவலையடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து 46 ஆயிரத்து 880 ரூபாய்க்கும், கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 860 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அதனைப் போலவே ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் உயர்ந்து 78 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 300 ரூபாய் உயர்ந்து 78 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆகின்றது.