சேலம் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த 44 வயது தமிழரசன் என்பவர் 20 ரூபாய் கொடுத்து தனியாக அழைத்துச் சென்றார். புதிதாகக் கட்டப்பட்டு வரும் ஒரு வீட்டிற்கு சிறுமியை அழைத்துச் சென்ற அவர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார்.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, தெருவில் விளையாடிக் கொண்டிருந்த அவளது அண்ணன் அங்கு ஓடி வந்து பார்த்தார். சிறுமியின் ஆடைகள் கழற்றப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவன், வீட்டிற்கு விரைந்து தனது பெற்றோரிடம், “பாப்பாவின் டிரஸ் எல்லாம் கழட்டி, தமிழ் அண்ணா ஏதோ செய்கிறார்” என்று கூறினான்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனே அந்த இடத்திற்கு விரைந்தனர், ஆனால் தமிழரசன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பெற்றோர் சிறுமியைப் பத்திரமாக வீட்டிற்கு அழைத்து வந்து, காவல் நிலையத்தில் தமிழரசன் மீது புகார் அளித்தனர். காவல்துறையினர் புகாரை ஏற்று, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, தமிழரசனை கைது செய்தனர்.
