நடிகர் வடிவேலு இப்போது நடித்து வரும் படம் சந்திரமுகி-2. இதில் ராதிகா சரத்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பி.வாசு டைரக்டு செய்யும் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் சந்திரமுகியாக நடிக்கிறார். பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் சந்திரமுகி-2 சூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை ராதிகா சரத்குமார் தன் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார். வடிவேலுவின் ரிஸ்க் எடுக்குறது எல்லாம் எனக்கு ரஸ்க் சாப்புடுறது மாதிரி எனும் காமெடியை ரீ கிரியேட் செய்து உள்ளனர். இந்த வீடியோ இப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.