இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் வாயிலாக தமிழில் அறிமுகமானவர் நடிகை ராஷி கண்ணா. இதையடுத்து அயோக்கியா, சங்கத்தமிழன், அடங்க மறு என தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வருகிறார். இறுதியாக கடந்த வருடம் வெளியான சர்தார் திரைப்படத்தில் நடித்து இருந்தார். அதோடு அரண்மனை-4 படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

அண்மையில் ராஷிகண்ணா விருது விழாவிற்கு எல்லை மீறிய கிளாமர் உடையணிந்து சென்று உள்ளார். அப்போது எடுக்கப்பட்ட போட்டோ மற்றும் வீடியோக்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. தமிழ் மட்டுமல்லாமல் பாலிவுட் பக்கமும் அவர் பிஸியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.