நெல்சன் திலிப்குமார் டைரக்டில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வரும் படம் “ஜெயிலர்”. இந்த படத்தில் சிவராஜ் குமார், மோகன்லால், சுனில், ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷரோஃப், தமன்னா உட்பட பல்வேறு நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். நடப்பு ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் இப்படமும் ஒன்றாகும்.

இந்த படத்தில் ரஜினிகாந்தின் காட்சிகளை எடுத்து முடித்துவிட்டார்களாம். தன் டப்பிங் கூட ரஜினி பேசி முடிக்க போகிறார் என தகவல் வெளிவந்தது. இந்த படம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி உலகளவில் வெளியாகிறது. இந்நிலையில் ஜெயிலர் படத்தில் நடிகை தமன்னாவிற்காக ஒரு பாடல் இருக்கிறதாம். இதற்குரிய டான்ஸ் பயிற்சியில் தமன்னா இருந்து வருகிறார். அப்போது எடுக்கப்பட்ட போட்டோவை சமூகவலைத்தளத்தில் பதிவுசெய்து ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்துள்ளனர்.