ரிஷபம் ராசி அன்பர்களே,

இன்று நீங்கள் மாற்றங்களை விரும்பக் கூடியவராக காணப்படுவீர்கள். எடுக்கும் அனைத்து முயற்சியிலும் வெற்றி இருக்கும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் செல்ல வேண்டி இருக்கும். சிலருக்கு எதிர்பாராத பொருள் வரவு இருக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் சூழல் உள்ளது.

கூடுதலாக உழைக்க வேண்டியது வரும். எதிலும் கவனமாக ஈடுபடுவது நல்லது. செயல்கள் அனைத்திலும் வெற்றி இருக்கும். சமத்தியமான செயலால் மற்றவர்கள் மனதில் இடம் பிடிப்பீர்கள். இன்று பெண்களுக்கு பிரச்சனை எதுவும் இல்லை. குழப்பங்கள் சரியாகும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.

இன்று மாணவர்கள் மிகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். கல்வி மீது முழு அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். நன்றாக படித்து முன்னேறும் சூழல் உள்ளது. இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிஷ்ட எண்: 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் பச்சை நிறம்