ரிஷப ராசி அன்பர்களே,

இந்த நாள் புனித பயணங்கள் கோவில் குளங்கள் என பக்தி மிக்க நாளாக இருக்கும். புதிய திருப்பங்கள் ஏற்பட்டு விருப்பங்கள் நிறைவேறும். உங்கள் புகழ் ஓங்கி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் பெறுவீர்கள் .திறமையான பேச்சு மூலம் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். எதிர்த்து செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள்.

இன்று உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிடைக்கும்.எடுத்த காரியங்கள் சூடுபிடிக்க துவங்கும். மன மகிழ்ச்சி அதிகரிக்கும்.வெளி  வட்டாரங்களில்  நல்ல பெயர் எடுப்பீர்கள். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. இன்று கடன் பிரச்சினைகளில் தீர்வு கிடைக்கும். கடனில் ஒரு பகுதி அடைபடும். பெண்கள் இனிய கனவுகளை காண்பீர்கள். நல்ல முன்னேற்றம் ஏற்படும். காசு பணத்தை பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்.

இன்று மாணவர்கள் துணிந்து எடுக்கும் முடிவுகளில் வெற்றி கிடைக்கும். காரியங்கள் மிகச் சிறப்பாக நடக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  :  மேற்கு

அதிஷ்ட எண்  :  இரண்டு ஐந்து மற்றும் ஏழு

அதிர்ஷ்ட நிறம்  :  வெள்ளை மற்றும் பச்சை நிறம்