மேஷ ராசி அன்பர்களே,

இன்று உறவினர்கள் வருகையால் நன்மை  ஏற்படும். அரசாங்கத்தால் லாபம் ஏற்படும். அந்தஸ்து உயரும் நாள் என்று சொல்லலாம். காரியங்களை சாதித்துக் கொள்ள முடியும். இன்று உறவினர்களின் வீட்டு தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பீர்கள். வீட்டு மனை வாங்கும் யோகம் உள்ளது. முன்னேற்றமான வாழ்க்கை அமையும். சிலருக்கு நினைத்தவரை கைபிடிக்கும் யோகம் உண்டு.

எதிர்பார்த்த தகவல் நல்ல தகவலாக வந்து சேரும். இன்று எடுக்கும் முடிவுகளை தெளிவாக எடுப்பீர்கள். இறைவன் அருள் அற்புதமாக இருக்கிறது. உங்களுக்கு பயம் வேண்டாம். கோவில் குளங்களுக்கு சென்று வருவதும் குலதெய்வ வழிபாட்டு மேற்கொள்வதும் நல்லது .இன்று பெண்கள் மன மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். காரிய வெற்றி இருக்கும்.

முன்பின் தெரியாதவர்களிடம் கவனமாக இருங்கள். இன்று மாணவர்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள். சிந்தித்து எடுத்த முடிவுகளில்  வெற்றி காண்பீர்கள். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  :  வடக்கு

அதிஷ்ட எண்  :  இரண்டு மற்றும் நான்கு

அதிர்ஷ்ட நிறம்  :  வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்