மீனம் ராசி அன்பர்களே,

இன்று வளர்ச்சி  கூடுவதற்கு இறைவழிபாடு கண்டிப்பாக வேண்டும். இறைவழிபாடு ஓரளவு மன அமைதியை கொடுக்கும். இதனால் காரியங்களில் வெற்றி கிடைக்கும். வெற்றிகரமான வாழ்க்கை மனதிற்கு நிம்மதியை கொடுக்கும். பொதுநல விவகாரங்களில் ஈடுபடுவீர்கள். திருப்பங்கள் கண்டிப்பாக ஏற்படும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். உணவு விஷயங்களில் கவனமாக இருங்கள். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

அடுத்தவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. பொது விஷயங்களை கையாளும்போது கவனமாக இருங்கள். குடும்ப விஷயங்களை பிறரிடம் சொல்ல வேண்டாம். ரகசியங்களை பாதுகாப்பது நல்லது. இந்த நாளை மன மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது உங்கள் கையில் தான் இருக்கிறது. பெண்கள் நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.

சகோதர சகோதரிகளை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள். வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று மாணவர்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். கலை துறையில் மிகுந்த ஆர்வத்துடன் காணப்படுவீர்கள். தடைகளை உடைத்து எறிந்து வெற்றி பெற முடியும். இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: ஆறு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்