ரிஷபம் ராசி அன்பர்களே,

இன்று எதையும் சமாளிக்கும் திறமை கண்டிப்பாக இருக்கும். தொழில் வியாபாரம் செழிக்க கிடைக்கும் வாய்ப்புகளை தவறாமல் பயன்படுத்த வேண்டும். செலவுகளில் சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும். சிரமத்தை ஏற்படுத்திய பணி சரியாகும். இன்று சிலருக்கு வீடு மனை மூலமாக லாபம் பெறும் சூழல் உள்ளது. பணம் விஷயத்தில் பொறுப்புகளை ஏற்க வேண்டாம்.

யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். சில காரியங்கள் கால தாமதமாக நடக்கும். கொடுத்த கடனை வசூல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் இருப்பீர்கள். சண்டை சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம். இன்று பெண்களுக்கு முன் கோபம் வெளிப்படும். சில பணிகள் காலதாமதம் ஆகிறதே என்று வருத்தப்படுவீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

இன்று மாணவர்கள் சுகபோக வாழ்க்கையை அனுபவிக்க முடியும். பிடித்தமான கல்வி அமையும். பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: இரண்டு மற்றும் ஏழு

அதிஷ்ட நிறம்: ஊதா மற்றும் நீல நிறம்