மேஷம் ராசி அன்பர்களே,

இன்று செயல்களில் நேர்த்தி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் அன்பு பாராட்டுவார்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சியில் முன்னேற்றமான பாதை ஏற்படும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். திறமையால் வெற்றி பெறும் சூழல் உள்ளது. குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.

பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும் வரவுக்கு மீறிய செலவு ஏற்படும். முயற்சியில் தடை ஏற்பட்டு நல்லது நடக்கும். இந்த பெண்கள் பேச்சில் கவனம் தேவை. அக்கம் பக்கத்தில் கவனமாக பேச வேண்டும். பணிசுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள்.

இன்று மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறுவதற்கான சூழலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். முயற்சி செய்தால் கண்டிப்பாக வெற்றி பெற முடியும். முழு அக்கறையுடன் பாடங்களை படிக்க வேண்டும். இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: மூன்று ஆறு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் பச்சை நிறம்