மிதுனம் ராசி அன்பர்களே,

இன்று பேச்சை குறைத்துக் கொண்டு செயலில் ஈடுபடுவது நல்லது. பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்து கொடுப்பீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். திருமண பேச்சு வார்த்தைகள் சுமூகமாக முடியும். தாயின் உடல் ஆரோக்கியம் சீராகும். வியாபாரத்தில் புதிய சலுகைகளை அறிவிப்பீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள் என்று சொல்ல முடியும்.

தொழில் நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். இடையூறாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கப்பெறும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் இடமாற்றம் தாமதப்பட்டாலும் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பெண்கள் இன்று குடும்பத்தை அற்புதமான முறையில் கவனித்துக் கொள்வீர்கள். மன அழுத்தம் விலகும். எண்ணற்ற மாற்றங்கள் ஏற்றங்கள் ஏற்படும்.

திருமணமாகாமல் இருந்த கன்னிப் பெண்களுக்கு நல்ல வரன்கள் அமையும். இன்று மாணவர்கள் திறமையால் வெற்றி பெற முடியும். கல்வியில் அக்கறை அதிகரிக்கும். படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: ஒன்று மற்றும் ஆறு

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்