கடகம் ராசி அன்பர்களே,

இன்று எதிலும் அற்புதமாக செயல்படுவீர்கள். புது புது விஷயங்களை யோசித்து செயல்படுத்துவீர்கள். சிலர் பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள். தொழில் வியாபாரத்திற்கு தேவையான மாற்றங்களை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் உண்டாகும். இன்று பெண்கள் எடுக்கும் காரியங்கள் சிறப்பாக முடியும்.

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணம் வருவதில் தடை இருந்தாலும் உடைத்தெறிந்து பணவரவை ஏற்படுத்திக் கொள்ள முடியும். சேமிப்பு அதிகரிக்க வேண்டும். முன்னேற்றமான வாழ்க்கை அமையும் நாளாக இருக்கும். பெண்கள் இன்று யோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். அற்புதமாக செயல்பட்டு காரியங்களை முடித்து காட்டுவீர்கள்.

இன்று மாணவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்வீர்கள். காரியங்களில் வெற்றி உண்டு. கல்வியில் சாதிக்க முடியும். உயர்கல்வி பிடித்தமான கல்வியாக அமையும். இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: மூன்று மற்றும் ஏழு

அதிஷ்ட நிறம்: ஊதா மற்றும் மஞ்சள் நிறம்