சிம்மம் ராசி அன்பர்களே,

இன்று புது புது விஷயங்கள் மனதில் தோன்றும். புதிய திட்டங்கள் செயல் வடிவம் பெரும். பிள்ளைகள் பற்றி கவலை ஏற்பட்டு பின்னர் சரியாகும். வாழ்க்கை புதிய பாதையை நோக்கி செல்லும். மன தடுமாற்றம் ஏற்பட்டு மாறும். எண்ணற்ற மாற்றங்கள் ஏற்றங்கள் கண்டிப்பாக நடக்கும். அபாரமான செயல்திறனால் வெற்றி வாகை சூடுவீர்கள்.

இஷ்ட தெய்வத்தின் அருள் துணையாக இருக்கும். நல்ல நண்பர்களின் சேர்க்கையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். துயர் விலகும். தூய்மையான எண்ணம் கொண்டவராக இருப்பீர்கள். நட்பால் நல்லது நடக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றத்தை காணலாம். சம்பள உயர்வு பதவி உயர்வு போன்றவை கிடைக்கும். பெண்கள் இன்று புதிய வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொள்வீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் வெற்றி அடையும்.

இன்று மாணவர்கள் தைரியமாக எதையும் செய்வீர்கள். சந்தேகங்களை தெளிவு படுத்திக் கொள்ளுங்கள். கல்வியில் முழு கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: ஐந்து மற்றும் ஆறு

அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் நீல நிறம்