தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் ‘ஜன நாயகன்’ திரைப்படம் சென்சார் பிரச்சனைகளால் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து படத் தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த முக்கியமான வழக்கு, சரியாகப் பொங்கல் பண்டிகை தினமான ஜனவரி 15-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. பண்டிகை நேரத்தில் படம் ரிலீஸாகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இது ஒருபுறம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

​மற்றொருபுறம், கரூரில் நடந்த உயிரிழப்புகள் தொடர்பான வழக்கிலும் விஜய் ஆஜராக வேண்டிய சூழல் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பொங்கல் விடுமுறைக்குப் பிறகு இந்த சட்ட ரீதியான அழுத்தம் இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. ஒரே நேரத்தில் சினிமா ரிலீஸ் சிக்கல் மற்றும் அரசியல் ரீதியான சட்டப் போராட்டங்கள் என இரண்டு பக்கமும் நடிகர் விஜய்க்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.