சமந்தாவும்  விஜய்  தேவரகொண்டாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், தற்போது ராஷ்மிகா மந்தனாவுடன் அவர் லிவிங் டுகெதர்-ல் உள்ளதாக தகவல்  தீயாக இணையத்தில் பரவியதையடுத்து அடுத்தடுத்து போலியான தகவல்கள் பரவி வந்தது. இந்நிலையில் டோலிவுட் நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா திருமணம் குறித்த தெளிவு ஏற்பட்டுள்ளது.

பிப்ரவரியில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா திருமணம் நடக்கவுள்ளதாக பரவி வரும் வதந்திகளுக்கு விஜய் தேவரகொண்டா குழு சமீபத்தில் பதிலளித்துள்ளது. இதில் எந்த உண்மையும் இல்லை என்றும், சமூக வலைதளங்களில் வரும் செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இதன் மூலம் அவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என்ற வந்தந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.