ரஷ்யா மற்றும் ஈரானாகிய நாடுகள் சர்வதேச வடக்கு மற்றும் தெற்கு போக்குவரத்து வழித்தடத்தை மேம்படுத்த செய்யும் வகையில் ரயில் சேவை இணைப்பை உருவாக்குவதற்காக சமீபத்தில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதில் பாலிடெக் கடலில் உள்ள ரஷ்ய துறைமுகங்களை இந்திய பெருங்கடல் மற்றும் வளைகுடாவில் உள்ள ஈரானிய துறைமுகங்களுடன் இணைப்பதற்கு உதவுகிறது.

இது இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான வர்த்தக விரிவாக்கத்தை மிகவும் எளிதாக்கும். இந்த ரயில் சேவை இணைப்பானது புவி ரீதியிலான இணைப்பை மேம்படுத்த செய்வதற்கும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்குமான ஒரு மகத்தான ஆற்றலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.