தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு சமீபத்தில் தடை விதிக்கப்பட்டது. அதே சமயம் தடையை வீரி ஆன்லைன் ரம்மி விளையாடினால் பல தண்டனைகள் வழங்கப்படும் எனவும் அரசு எச்சரித்தது. இருந்தாலும் பல மாநிலங்களில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட பல ஆன்லைன் விளையாட்டுகள் செயல்பாட்டில் இருந்து வருகிறது.

இந்நிலையில் ஆன்லைன் விளையாட்டு களில் கிடைக்கும் வருமானத்திற்கு வரி விதிப்பது தொடர்பான புதிய விதிமுறைகளை CBDT அறிவித்துள்ளது. இந்த புதிய அறிவிப்பின்படி ஆன்லைன் விளையாட்டு களில் பெற்ற போனஸ் அல்லது ஊக்கத்தொகை நூறு ரூபாய்க்கு மேலாக இருந்தால் அவற்றை வெளியே எடுக்கும்போது TDS வரி விதிக்கப்படும். பணத்துக்கு நிகரான காயின், வவுச்சர் மற்றும் கூப்பன் போன்றவற்றிற்கும் வரை வசூலிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.