கேரள மாநிலத்தில் இருக்கும் கே ஆர் நாராயணன் திரைக்கலை கல்லூரியில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக நடந்த பிரச்சினைகள் தொடர்பான ஆவணப்படம் இன்று திரையிடப்பட இருக்கிறது. ராம் கே நாம் என்ற பெயருடைய இந்த படம் மதரீதியாக நடந்த வன்முறைகளை உள்ளடக்கியது.

இன்று இரவு 7 மணி அளவில் கல்லூரி மாணவர்கள் இந்த படத்தை திரையிட இருக்கின்றனர். நேற்று அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை முன்னிட்டு மாணவர்கள் இந்த படத்தை திரையிட முயற்சித்த போது அப்பகுதியை சேர்ந்த பாஜகவினரால் தடுத்து நிறுத்தப்பட்டது.

இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் திரைப்படத்தை ஒளிபரப்புவதை ஒத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். இதனால் இன்று இரவு திரைப்படம் திரையிட இருக்கிறது. மேலும் மாநிலத்தின் பல பகுதிகளில் ராம் கி நாம் திரைப்படம் திரையிடப்படும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.